பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன், நடிகராகவும் வலம் வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்த அவரது முதல் படமான ‘லெஜண்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியிருந்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதனைத்தொடர்ந்து கருடன் பட இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் தற்போது ‘லீடர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய திரைப்படத்தில் லெஜண்ட் சரவணன் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, லெஜண்ட் சரவணனின் மாறுபட்ட தோற்றமும், படத்தின் மொத்த காட்சியமைப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போது, இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
