NEEK பட கதாநாயகன் பவிஷ் நடித்துள்ள ‘லவ் ஓ லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பவிஷ். இவர் தனுஷ் அவர்களின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் பவிஷ்  அடுத்தப்படியாக இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் ஓ லவ்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக நாகா துர்கா நடித்துள்ளார். காதலை மையமாகக் கொண்ட கமர்ஷியல் அம்சங்களுடன் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தினேஷ் மற்றும் ஜி. தனஞ்ஜெயன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி மற்றும் கலைப்புலி தானு வெளியிட்டுள்ளனர். அதில், இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading