தாய்லாந்தில் VIBE செய்யும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நட்சத்திர தம்பதி!

தெலுங்குத் திரைப்பட உலகில் கடந்த சில ஆண்டுகளாக காதல் ஜோடியாக பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. கடந்த மாதம் இவர்கள் இருவரும் உதய்ப்பூர் நகரில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண நிகழ்விற்காக, அவர்கள் இருவரும் ஒரு மாத காலத்திற்கு படப்பிடிப்பு பணிகளில் இருந்து இடைவெளி எடுத்திருந்தனர். கடந்த வாரம், ராஷ்மிகா மட்டும் தனது மைஸா திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

தற்போது ரணபாலி என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து வரும் இந்த ஜோடி, அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு முன்பாக ஹனிமூன் பயணமாக சென்றுள்ளனர். இவர்கள் தற்போது கோ சமூய் என்ற தீவில் தங்கியுள்ளனர். அங்கு அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

“திருமண விழாக்கள் முடிந்த பின், சில நாட்கள் அமைதியாகவும் நிதானமாகவும் நேரத்தை செலவிட விரும்பினோம். அமைதியான காலையிலிருந்து தொடங்கி, மதிய வேளைகளில் நீச்சல், மாலை நேரங்களில் டேபிள் டென்னிஸ் மற்றும் பல்வேறு நீர்விளையாட்டுகள், அதனைத் தொடர்ந்து நீண்ட நேர சிரிப்புகளுடன் கூடிய சினிமா இரவுகள் என எங்கள் நேரத்தை மகிழ்ச்சியாகக் கழித்து வருகிறோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading