தனது தோழிகளான சக நடிகைகளுடன் ‘தாய் கிழவி’ பட வெற்றியைக் கேக் வெட்டிக் கொண்டாடிய நடிகை ராதிகா!

தமிழ் திரையுலகின் கலை அரசியான  ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த தாய் கிழவி திரைப்படம் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், அவரது நெருங்கிய தோழியும் முன்னணி நடிகையுமான ஸ்ரீப்ரியா அவருக்காக சிறப்பு வெற்றி விருந்தை ஏற்பாடு செய்தார்.

இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் லதா, ஜெயசுதா, கீதா, ஷோபனா, லிஸி, பூர்ணிமா பாக்யராஜ், மீனா ஆகிய நடிகைகள் மற்றும் சரத்குமார், பாக்யராஜ், மேலும் இப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு ராதிகாவை பாராட்டி மலர்க்கொத்து வழங்கினர்.

இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் அதிக லாபத்தையும் உயர்ந்த வசூலையும் பெற்ற திரைப்படமாக ‘தாய் கிழவி’ திகழ்கிறது. குறிப்பாக, நடிகைகள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த படங்களில் தமிழ் சினிமாவில் மிக அதிக வசூலைப் பெற்ற படமாகவும் இது சாதனை படைத்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading