பெத்தி படப்பிடிப்பில் நடிகர் ராம் சரண்-க்கு காயம்? விளக்கம் கொடுத்த படக்குழு! #PEDDI

புச்சி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘பெத்தி’. இப்படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, ராம் சரண் அவர்களின் இடது கண்ணில் லேசான காயம் ஏற்பட்டதாக படக்குழு  தெரிவித்துள்ளது.

முன்னதாக ராம் சரண்-க்கு பெத்தி படப்பிடிப்பில் பலத்த காயம் ஏற்பட்டதாக செய்திகள் பரவிய நிலையில் அவர் நலமுடன் இருப்பதாகவும், நாளை மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகவும் படக்குழு விளக்கம் கொடுத்துள்ளது.

இந்த திரைப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சிவ ராஜ்குமார், திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படம், வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading