அயலான் பட இயக்குனருடன் கைகோர்த்த சூரி… வெளியான புதிய பட அறிவிப்பு!

தமிழில் குட் பேட் அக்லி மற்றும் டியூட் ஆகிய படங்களுக்குப் பின்னர், பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் சூரி. இந்தப் படத்தை ஆர். ரவிகுமார் இயக்குகிறார். இவர் முன்னதாக இன்று நேற்று நாளை மற்றும் அயலான் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சூரி, மண்டாடி படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக இந்த புதிய திட்டத்தில் இணைகிறார். இந்தப் படத்தின் கதைக்களம் 2015ஆம் ஆண்டு சென்னை நகரில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற பெரிய நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் என்பதால், இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகையை சம்பளமாக சூரி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆர். ரவிகுமார் இயக்கிய இன்று நேற்று நாளை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சிவகார்த்திகேயன் நடித்த அயலான் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading