இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில், திரிஷா, சுவாசிகா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த படம் மே 14ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் பகுதி வாரியான உரிமைகள் தொடர்பான விற்பனை இன்னும் தொடங்கப்படவில்லை என்றாலும், டிஜிட்டல் உரிமைகள் தொடர்பான வியாபாரம் தற்போது நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, முதல் கட்டமாக சுமார் 110 கோடி ரூபாய் மதிப்பில் டிஜிட்டல் உரிமை விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ‘கருப்பு’ திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 130 கோடி ரூபாய் எனக் கூறப்படும் சூழலில், வெளியீட்டிற்கு முன்பே 110 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
ட
