‘கர’ திரைப்படத்தில் ‘செல்லி’ கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மமிதா பைஜூ!

நடிகர் தனுஷ் நடித்த கடைசியாக வெளியான திரைப்படம் ‘தேரே இஷ்க் மே’. இந்தி மொழியில் உருவான இந்த படம் தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், இந்தி சந்தையில் 160 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்றது. தற்போது, ‘போர் தொழில்’ திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்த புதிய படம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இந்த படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளதுடன், சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘கர’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் மேற்கொண்டுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் ‘செல்லி’ என்ற கதாபாத்திரத்தில் மமிதா பைஜு நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading