பிச்சைக்காரன்’ திரைப்படத்திற்குப் பிறகு, இயக்குநர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘நூறு சாமி’. ‘பிச்சைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற “நூறு சாமிகள் இருந்தாலும்” என்ற பாடலின் முதல் சொல்லைத் தலைப்பாகக் கொண்டு இந்த படத்திற்கு ‘நூறு சாமி’ என பெயரிட்டுள்ளனர்.
இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் சுவாசிகா, லிஜோமோல் ஜோஸ், கருணாஸ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், மே 1ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று இப்படத்தின் முதல் பாடலான ‘மாய கனவோ’ என்ற பாடலின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பாடல் வருகிற 25ஆம் தேதி முழுமையாக வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
