பரத் நடித்த ‘காளிதாஸ்’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த அந்த படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றதுடன், இயக்குனர் ஸ்ரீ செந்தில் அவர்களின் இயக்கத்தில் உருவானது. தற்போது அதன் தொடர்ச்சியாக ‘காளிதாஸ் 2’ உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளதுடன், ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, அபர்ணதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், 25 ஆண்டுகளுக்குப் பிறகு சங்கீதா மீண்டும் தமிழில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலான நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பேசிய பரத், தனது திரையுலக பயணத்தில் பல ஏற்றத் தாழ்வுகள் இருந்ததாகவும், ஒரு நடிகரின் மார்க்கெட் வெற்றி, தோல்வி ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடுகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், தன்னுடைய கடினமான காலத்தில் ‘காளிதாஸ்’ படம் மிகப்பெரிய ஆதரவாக இருந்ததாகவும், அது தன்னுடைய கம்-பேக் படமாக அமைந்ததாகவும் கூறினார். நல்ல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கிடைத்தால் ஒரு நடிகரின் பாதை தானாகவே உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தப் படத்தில் கதை வழக்கத்தை விட பிரம்மாண்டமாக உருவாக்கியிருப்பதாகவும், காளிதாஸ் 2 நிச்சயமாக எனக்கு ஒரு சிறந்த படமாக இருக்கும் என நான் நம்புகிறேன் என்று கூறினார்.
