‘ஜமா’ பட புகழ் பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் முதல் பாடல் வெளியாகி‌ வைரல்!

‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் கவனம் பெற்ற பாரி இளவழகன், தற்போது ‘அன்பே டயானா’ என்ற புதிய படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தை ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சேத்தன், நடிகை ரோஜா, பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இந்த படம், சென்னை பெரம்பூரை மையமாகக் கொண்ட காதல் கதையாக உருவாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான டீசர் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ‘பெரம்பூர் கானா’ எனும் முதல் பாடல் வெளியாகி‌ கவனத்தை ஈர்த்து வருகிறது. ஜாஸ்ஸி கிஃப்ட் பாடிய இந்த பாடலை மோகன் ராஜன், பாக்கியம் சங்கர், முத்தமிழ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். இப்படம் கோடை காலத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading