நடிகை பிரியங்கா மோகன், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக தொடர்ந்து நடித்துவருகிறார்.
சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக மையக் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றார்.
இந்நிலையில், மீண்டும் ஒரு திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் பிரியங்கா மோகன். அதன்படி, ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்பில், ‘சக்ரா’ திரைப்படத்தை இயக்கிய எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
