‘பராசக்தி’ திரைப்படத்தைத் தொடர்ந்து பவன் கல்யாண் உடன் ஸ்ரீலீலா இணைந்து நடித்துள்ள ‘உஸ்தாத் பகத்சிங்’ திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில், தன்னைச் சுற்றி சமூக வலைதளங்களில் வெளியாகும் ட்ரோல்கள் குறித்து அளித்த பேட்டியில் ஸ்ரீலீலா தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். “நான் நடிக்கும் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் சமூக வலைதளங்களில் பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் பரவுகின்றன.
ஆரம்பத்தில் அவற்றை மனதில் வைத்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். ட்ரோல்கள் காரணமாக பலமுறை மனஉளைச்சலுக்கு உள்ளாகி கண்ணீர் விட்டதுண்டு. ஆனால் இப்போது பாராட்டுகளையும் விமர்சனங்களையும் சமமாக ஏற்றுக்கொள்ள கற்றுக்கொண்டேன். எந்த கருத்து முக்கியமோ அதை எடுத்துக்கொண்டு, தேவையில்லாதவற்றை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளேன்.
இப்போது அந்த அளவிற்கு மனப்பக்குவம் வந்துவிட்டது. என் வளர்ச்சியை மட்டும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறேன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழி திரைப்படங்களிலும் நடிப்பதால் மிகவும் பிஸியாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
