பாலிவுட் திரையுலகில் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் திஷா பதானி. மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களிடையே பரவலாக அறியப்பட்டார். தனது கவர்ச்சியான நடிப்பால் தனித்துவமான ரசிகர் வட்டாரத்தையும் உருவாக்கியுள்ளார்.
தமிழில் ‘கங்குவா’, தெலுங்கில் ‘கல்கி’ போன்ற தென்னிந்திய திரைப்படங்களிலும், அதேசமயம் பாலிவுட் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இதற்கு இணையாக, மாடல் உலகிலும் சிறப்பாக செயல்பட்டு தனது கலைவாழ்க்கையை விரிவுபடுத்தி வருகிறார்.
இந்த நிலையில், மும்பையில் அண்மையில் நடைபெற்ற லக்மே ஃபேஷன் ஷோவில் திஷா பதானி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த கவர்ச்சிகரமான உடையுடன் வெளிப்படுத்திய ஸ்டைலிஷ் தோற்றம், அங்கு கலந்து கொண்டவர்களை கவர்ந்து கவனம் ஈர்த்தது.
