காந்தாரா திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, நடிகர் ரிஷப் ஷெட்டி அடுத்ததாக ‘தி பிரைட் பாரத் சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ என்ற படத்தில் நடிக்கிறார். பான் இந்தியா அளவில் உருவாகும் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் சந்தீப் சிங் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படம் பல மொழிகளில் வெளியிடப்பட இருப்பதால், தென்னிந்திய திரையுலகத்தைத் தாண்டி பாலிவுட்டிலிருந்தும் பல முக்கிய நடிகர்கள் இதில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் துரந்தர் தி ரிவெஞ்ச் படத்தில் மேஜர் இக்பால் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்ற அர்ஜுன் ராம்பால், இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒருவராக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ப்ரீத்தம் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
