தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், கார் பந்தய வீரராகவும் தனித்துவம் பெற்றுள்ளார். சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றுள்ள அவர், தற்போது தொடர்ந்து கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து, அவர் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், நடிகராக மட்டுமின்றி புதிய பாதையைத் தேர்வு செய்து, தயாரிப்பாளராகவும் மாற முடிவு செய்துள்ளார் அஜித் குமார். ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் எல்.எல்.சி.’ என்ற பெயரில் அவர் புதிய நிறுவனத்தை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளார். மேலும், ரூ.2.56 லட்சம் கட்டணமாக செலுத்தி ஆயுட்கால உறுப்பினராகவும் இணைந்துள்ளார்.
அஜித் குமார் எடுத்துள்ள இந்த புதிய முடிவு அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், அவர் தயாரிப்பாளராக மாறிய பிறகு தொடர்ந்து படங்களில் நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சமீபகாலமாக அவர் எடுத்து வரும் முடிவுகள் குறித்து திரையுலகிலும் ரசிகர்களிடமும் பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன.
