மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘பேட்ரியாட்’. மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் டீசர் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் பகத் பாசில், ரேவதி, நயன்தாரா, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ‘பேட்ரியாட்’ திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய திரைப்பட விழா ஏப்ரல் 23 முதல் 26ஆம் தேதி வரை லாஸ் ஏஞ்சலீஸில் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு மொத்தம் 27 தெற்காசிய திரைப்படங்கள் அமெரிக்காவில் திரையிடப்படவுள்ளன. மேலும், இந்த விழாவில் 18 குறும்படங்கள் உட்பட இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், மலேசியா, பிலிப்பின்ஸ், ஜப்பான், பிரிட்டன், நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் படங்களும் திரையிடப்பட உள்ளன.
