சமீப காலங்களில் 90களிலும் 2000களிலும் வெளியான வெற்றி திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பித்து மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் ‘ரீ-ரிலீஸ்’ நடைமுறை அதிகரித்து வருகிறது. இந்த புதிய போக்கின் மூலம் பல பழைய படங்கள் மீண்டும் ரசிகர்களை சென்றடைந்து வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அந்த வரிசையில், இயக்குநர் சீமான் எழுதி இயக்கிய ‘தம்பி’ திரைப்படமும் தற்போது ரீ-ரிலீஸ் பட்டியலில் இணைந்துள்ளது. மாதவன் நடித்த இந்த படம் 2006ஆம் ஆண்டு வெளியானபோது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் பூஜா, வடிவேலு, மணிவண்ணன் மற்றும் பிஜு மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், ‘தம்பி’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது.
