தெலுங்கு திரைப்படமாக உருவாகும் ‘எல்லம்மா’ எனும் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இயக்குநர் வேணு ஏல்தந்தி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நானி அல்லது நிதின் ஆகியோரில் ஒருவரே கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால், தற்போதைய புதிய தகவல்களின் படி, அந்த இரு நடிகர்களுக்கு பதிலாக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் என்று கூறப்படுகிறது. இந்த மாற்றம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனுடன் தொடர்பாக, நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்திலிருந்து விலகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக புதிய கதாநாயகியை தேர்வு செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்தக் கதையும் கதாபாத்திரமும் அவருக்கு பிடித்திருந்ததால் நடிக்க சம்மதித்தார் என கூறப்படுகிறது. ஆனால், கதாநாயகன் மாற்றப்பட்டு தற்போது தேவிஸ்ரீ பிரசாத் அந்த வேடத்தில் நடிப்பதால் அது தனக்கு பொருந்தாது என்று கருதி இந்தத் திட்டத்திலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
