புதுப்பேட்டை கதையை எழுதி முடித்துவிட்டேன்… காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த செல்வராகவன்!

தமிழ் திரைப்பட உலகில் 2000ஆம் ஆண்டுகளில் ரசிகர்களால் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். கடந்த சில ஆண்டுகளாக அவர் தொடர்ந்து திரைப்படங்களை இயக்காமல், நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘நானே வருவேன்’ திரைப்படம் 2022ஆம் ஆண்டு வெளியாகியது. தற்போது ‘மெண்டல் மனதில்’ மற்றும் ‘7 ஜி ரெயின்போ காலனி 2’ ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்ததாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் “‘புதுப்பேட்டை 2’ கதையை எழுதி முடித்துவிட்டேன்” என்று பதிவு செய்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ‘7 ஜி ரெயின்போ காலனி 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதற்கு சுமார் இரண்டு ஆண்டுகள் கடந்தும் அது இன்னும் நிறைவடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ திரைப்படம் 2021ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டிருந்தாலும், 2024ஆம் ஆண்டு தொடங்கும் என கூறப்பட்ட படப்பிடிப்பு இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. எனவே, இந்த இரண்டு படங்களையும் விரைவாக முடித்து வெளியிடுவதோடு, ‘புதுப்பேட்டை 2’ திரைப்படத்தையும் தொடங்கி நிறைவு செய்ய வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading