சமீபத்தில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. அந்த அணியில் இடம்பெற்ற வீரர்களில் ஐதராபாதை சேர்ந்த திலக் வர்மாவும் ஒருவர். அவர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் பெற்றார்.
இந்நிலையில், தற்போது தெலுங்கில் புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்துவரும் ‘பெத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு திலக் வர்மா சென்றுள்ளார். அப்போது, அவருக்கு ராம் சரண் கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக வழங்கியதுடன், அவரது விருப்பத்தின்படி அதில் தனது கையொப்பத்தையும் பதித்துள்ளார்.
திலக் வர்மா வெறும் ராம் சரணை சந்திப்பதற்காக மட்டுமே அந்தப் படப்பிடிப்பு தளத்திற்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கிரிக்கெட் தொடர்பான சில காட்சிகள் இடம்பெறுகின்றன. அந்தக் காட்சிகளில் திலக் வர்மாவும் நடித்துள்ளார். அவருடன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்ட பின்னரே, அவர் ராம் சரணிடம் கிரிக்கெட் பேட்டில் கையொப்பம் பெற்றுக் கொண்டார் என்பது தெரியவந்துள்ளது.
