இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் தமிழகத்தை உலுக்கிய உண்மைச் சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கை மையமாகக் கொண்டு ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கை’ என்ற திரைப்படம் உருவ.
‘கொன்றால் பாவம்’, ‘மாருதிநகர் காவல் நிலையம்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குநர் தயாள் பத்மநாபன், தற்போது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், இளவரசு மற்றும் கவிதா பாரதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் சினிமா வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த உண்மைச் சம்பவத்தை புதிய கண்ணோட்டத்தில் பதிவு செய்யும் முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தை 2எம் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதில் வெற்றி ‘அறிவுமதி’ என்ற கைதியாகவும், ரங்கராஜ் பாண்டே ‘சிவானந்தம்’ என்ற சிறை அதிகாரியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டனர். பிரிகிடா ‘மல்லிகா’வாகவும், சரவணன் ‘சற்குணம்’ கதாபாத்திரத்திலும், லொள்ளு சபா மாறன் ‘மூர்த்தி’யாகவும், லிஸ்ஸி ஆன்டனி ‘சூடாமணி’யாகவும், சுப்ரமணியம் சிவா ‘தர்மன்’ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
மேலும், பெரியாரிய சிந்தனையாளரான சுப. வீரபாண்டியன், கதைக்கு சித்தாந்த ரீதியான ஆழத்தை வழங்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு எம்.வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், தர்புகா சிவா இசையமைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதத்திலேயே படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது. தற்போது திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து, ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
