கன்னட திரைப்படத்தை ரீமேக் செய்யும் சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகேயன், ஒருபுறம் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கும் நிலையில், மறுபுறம் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தி வெற்றிப் படங்களை தயாரித்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்த ‘தாய் கிழவி’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, 100 கோடி ரூபாய் வசூலை நோக்கி நகர்ந்து வருகிறது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவுள்ள அடுத்த புதிய திரைப்படத்தை இயக்குநர் அம்மமுத்து சூர்யா இயக்க உள்ளார் என முன்பே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், 2023ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஹாஸ்டல் ஹுடுகாரு பேககிடாரே’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அந்த திரைப்படத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்திருந்த சிறப்பு தோற்றக் கதாபாத்திரத்தில், தமிழ் ரீமேக்கில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading