மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன், தொடர்ந்து கதாநாயகனாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். ‘சகாப்தம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், பின்னர் ‘மதுர வீரன்’, ‘படைதலைவன்’, ‘கொம்புசீவி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது மேலும் சில புதிய திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தனது தாய்மாமாவும் தயாரிப்பாளருமான எல்.கே. சுதீஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குநர் அகத்தியனின் மருமகனும், ‘சமர்’, ‘தீராத விளையாட்டு பிள்ளை’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய திரு இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம், சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிக்கிறது. திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
