ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா மற்றும் திரிஷா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் வரும் மே மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் சூர்யாவின் 45வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘கருப்பு’ படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் திரிஷா, நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் வெளியீடு பல நாட்களாக தாமதமாகி வந்த நிலையில், இது எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் ‘கருப்பு’ திரைப்படம் வரும் மே மாதம் 14ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் மேலும் எதிர்ப்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
