பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் இயக்குநர் அபூர்வ லகியா இயக்கி வரும் ‘மாத்ருபூமி’ திரைப்படம் தற்போது சென்சார் அனுமதிக்காக காத்திருக்கிறது. 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு மோதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு முதலில் ‘பேட்டில் ஆப் கல்வான்’ என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் தலைப்புக்கு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து ‘மாத்ருபூமி’ என மாற்றப்பட்டது. மேலும், சர்ச்சைகளைத் தவிர்க்கும் வகையில் சீனாவை நேரடியாகக் குறிப்பிடும் சில காட்சிகள் நீக்கப்பட்டதுடன், சில பகுதிகள் மீண்டும் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து சென்சார் சான்றிதழ் பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவத்தின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியம் இருப்பதால் சென்சார் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த ‘மாத்ருபூமி’ குறித்த தேதியில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
