‘LIK’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு… ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் வெளியீடு பல நாட்களாக தாமதமாகிய நிலையில், இப்படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், அந்த எதிர்பார்ப்புக்கு தற்போது விடைகொடுக்கும் வகையில் , ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading