பெண்களின் குணநலன்களை எளிதாக தீர்மானிக்கிறது இந்த சமூகம்… நடிகை ரிது சவுத்ரி டாக்!

தொலைக்காட்சி தொடர்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ரிது சவுத்ரி, சமீபத்தில் ‘பிக் பாஸ் தெலுங்கு சீசன் 9’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் இறுதிக்கட்டத்திற்கு அருகில் வரை தங்கி, சுமார் 90 நாட்கள் கழித்து வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் ரிது சவுத்ரி, சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான பதிவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். குறிப்பாக பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய அவரது இந்த பதிவு திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.

அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த அந்த பதிவில், “இந்த சமூகம் பெண்களின் குணநலன்களை மிகவும் எளிதாக மதிப்பீடு செய்து விடுகிறது. அவர்கள் கடந்த காலத்தில் சந்தித்த அனுபவங்களை பற்றி யாரும் கேட்க விரும்புவதில்லை. அவர்களின் அன்பும் பாசமும் குறித்து யாரும் அறிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. உறவுகள் முறிந்தாலும், மன அழுத்தத்தில் இருந்தாலும், அனைவரின் முன்னிலும் ஒரு பெண் சிரித்துக்கொண்டே இருப்பாள். ஆனால் அவள் அனுபவிக்கும் வலி மற்றும் வேதனையை இந்த சமூகம் கவனிக்காது. இறுதியில் ஏமாற்றப்படுவது ஒரு பெண்ணே” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading