சூப்பர் ஹீரோயினாக வித்தியாசமான கதைக்களத்தில் நடித்துள்ள நடிகை அடா சர்மா!

தமிழில் ‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில் நடித்த நடிகை அடா சர்மா, ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர். ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான அவர், தற்போது ‘சூப்பர் வெள்ளி’ என்ற திரைப்படத்தில் சூப்பர் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் ‘அக்ரோமாடோப்சியா’ எனப்படும் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக அவர் நடித்துள்ளார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகம் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் மட்டுமே தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை ராஜேஷ் பச்சானி இயக்கியுள்ளார். இதில் அடா சர்மாவுடன் விஜிலட்சுமி மற்றும் கிருஷ்ணமூர்த்தி சந்திரசேகரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வழக்கமான சூப்பர் ஹீரோ கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதை அமைப்பில் உருவாகியுள்ளது. பொதுவாக சூப்பர் ஹீரோக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். ஆனால் இந்த திரைப்படத்தில் வரும் சூப்பர் ஹீரோயின் மிகவும் சோம்பேறித்தனமாகவும், அடிக்கடி தூங்கிக்கொண்டே இருப்பவராகவும் காட்டப்படுகிறார். ஆனால் அவர் ஒருமுறை செயல்பட ஆரம்பித்தால் உலகத்தையே அழிக்கும் அளவிற்கு சக்தி கொண்டவராக மாறுகிறார். இப்படியான வித்தியாசமான கதாபாத்திரத்தில் அடா சர்மா நடித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading