இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் வகையில் உருவாகி 2015ஆம் ஆண்டு வெளியான ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் ‘டிமான்ட்டி காலனி 2’ இரண்டாம் பாகமும் வெளியிடப்பட்டு, அதுவும் பார்வையாளர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்று வெற்றி திரைப்படமாக மாறியது.
இரண்டாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது மூன்றாம் பாகமும் உருவாகி வருகிறது. இந்த மூன்றாம் பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த திரைப்படம் வருகிற மே மாத கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படம் குறித்து புதிய சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் இடம்பெறும் கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் குரு சோமசுந்தரம் இந்த திரைப்படத்தில் லைப்ரரியன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த வீடியோவில் குரு சோமசுந்தரத்தின் கதாபாத்திரத்தை உருவாக்கிய விதம் மற்றும் மேக்கிங் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த படத்தின் ஆடியோ உரிமையை டி-சீரிஸ் சவுத் நிறுவனம் பெற்றுள்ளதாகவும், தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமைகளை ஜீ தமிழ் மற்றும் ஜீ5 நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
