இயக்குநர் பிரேம் இயக்கத்தில் துருவ் சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி மற்றும் நோரா பதேஹி ஆகியோர் நடித்துள்ள ‘கே.டி. தி டெவில்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘சர்கே சுனார் தேரி சர்கே’ என்ற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகள் பாலியல் சார்ந்த கருத்துகளை வெளிப்படுத்துவதாக கூறி பல தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், இந்த பாடலை குறித்து நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணாவத் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில், “பாலிவுட் திரைப்படங்கள் கவர்ச்சியைத் தாண்டி தற்போது ஆபாசம் என்ற எல்லையையும் மீறி வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இது தவறானது என்று யாருக்கும் தோன்றவில்லையா? நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆபாசமான மற்றும் அருவருப்பான விஷயங்களை மக்கள் பார்க்கும் சினிமா மூலம் வெளிப்படுத்துவது சரியானதா? இதற்கு கட்டுப்பாடுகள் இருக்க வேண்டாமா? எனது கருத்துப்படி, பாலிவுட் திரைப்படங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
