Advertisement

“என் இரண்டு படங்களும் இறந்துபோன உறவினர்கள் போல இருந்தது!” – மிஷ்கின் பகிர்ந்த கனவு!

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள ‘பிசாசு 2’ நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இதேபோல் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘ட்ரெயின்’ படமும் வெளியீட்டுக்காக தயாராக உள்ளது. இரண்டு படங்களின் ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு நீடித்து வரும் நிலையில், தனது சமீபத்திய கனவு ஒன்றை மிஷ்கின் பகிர்ந்துள்ளார்.

அந்த கனவில், பெரிய யானை ஒன்று இறந்துபோன தனது இரண்டு குட்டிகளை தூக்கிக்கொண்டு வந்து மிஷ்கினின் கிணற்றில் போட்டதாகவும், அதன் பின்னர் வீட்டிற்குள் சென்று பழங்களையும் தண்ணீரையும் எடுத்து வந்து அந்த யானையின் முன் வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கனவுக்கு என்ன அர்த்தம் என்று சாட் ஜிபிடியிடம் கேட்டதாகவும் மிஷ்கின் கூறியுள்ளார். இறந்த இரண்டு குட்டிகள், தனது மனதில் நீண்ட காலமாக இருக்கும் இரண்டு நெருங்கிய உறவினர்களை குறிக்கலாம் என சாட் ஜிபிடி கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அந்த விளக்கத்தை கேட்டபோது, தனது மனதில் இருந்து நீங்காமல் இருக்கும் அந்த இரண்டு படங்களும் ‘ட்ரெயின்’ மற்றும் ‘பிசாசு 2’ ஆக இருக்கலாம் என்று தான் நினைத்ததாக மிஷ்கின் சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார்.

Add a Comment

Leave a Reply