2வது பாகம் உருவாக்குவது சில நேரங்களில் ஒரு வகையான சுரண்டலாகவே தோன்றுகிறது – இயக்குனர் பிரியதர்ஷன் OPEN TALK

மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் பிரியதர்ஷன். பல தசாப்தங்களாக இந்திய சினிமாவில் தனித்துவமான படைப்புகளை வழங்கி வரும் அவர், விரைவில் தனது 100வது திரைப்படத்தை நடிகர் மோகன்லால் நடிப்பில் இயக்கத் திட்டமிட்டுள்ளார். மலையாளத் திரைப்படங்களோடு மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் அவ்வப்போது திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் பிரியதர்ஷன். அந்த வகையில் தற்போது ஹிந்தி மொழியில் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் ‘பூத் பங்களா’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தைத் தொடர்ந்து, ஹிந்தி சினிமாவில் மிகுந்த வரவேற்பைப் பெற்று இரண்டு பாகங்களாக வெளியான ‘ஹேராபெரி’ திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தையும் பிரியதர்ஷன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ஒரு திரைப்படத்தின் தொடர்ச்சிப் பகுதிகள் உருவாக்கப்படுவது குறித்து தனது கருத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் பொதுவாக என்னுடைய திரைப்படங்களுக்கு சீக்வல் உருவாக்குவதை விரும்புவதில்லை. காரணம், ஒரு புதிய கதையை உருவாக்குவதற்கு நான் எவ்வளவு உழைத்திருக்கிறேன் என்பது எனக்கே தெரியும். அதுமட்டுமல்லாமல் சில நேரங்களில் ஏற்கனவே வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தின் தலைப்பை, அதற்கு எந்த தொடர்பும் இல்லாத மற்றொரு கதைக்கு இரண்டாம் பாகம் என்ற பெயரில் பயன்படுத்தி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுகின்றனர். எனது பார்வையில் ஒரு திரைப்படத்திற்கு சீக்வல் உருவாக்குவது சில நேரங்களில் ஒரு வகையான சுரண்டலாகவே தோன்றுகிறது. முதல் பாகத்தின் வெற்றியை காட்டி ரசிகர்களிடமிருந்து பணம் சம்பாதிக்க முயலும் ஒரு செயலாகவே அது இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading