‘ப்ரோ கோட்’ படத்தின் புதிய தலைப்பு இதுதானா? உலாவும் புது தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள ரவி மோகன்,  ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படமாக ‘ப்ரோ கோட்’ என்ற பெயரில் படத்தின் அறிவிப்பை வெளியிட்டு, அதனுடன் ஒரு அறிமுக வீடியோவையும் வெளியிட்டிருந்தார்கள்.

ஆனால் ‘ப்ரோ கோட்’ என்ற தலைப்பை பயன்படுத்தக் கூடாது என ஒரு மதுபான விற்பனை நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தது. அதன் பின்னர் இரு தரப்பினரும் ஆலோசனை நடத்தி இந்த பிரச்சனையை சுமூகமான முறையில் தீர்த்துக் கொண்டதாக தகவல்கள் வெளியானது. இருப்பினும் அதன் பின்னர் வெளியிடப்பட்ட ‘ப்ரோ கோட்’ அறிமுக வீடியோவில், படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் 1’ என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கு ‘ப்ரோ கிளப்’ என்ற புதிய பெயரை வைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த புதிய தலைப்பிற்கு எதிராக மீண்டும் எந்தவிதமான சட்டப் பிரச்சனைகளும் எழாமல் இருப்பதை முழுமையாக உறுதி செய்த பிறகே, படத்தின் அதிகாரப்பூர்வமான தலைப்பை அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading