மும்பையில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் ‘பாரத் பாக்கிய விதாதா’ செவிலியர் கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனா ரணாவத்!

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கடந்த சில ஆண்டுகளாக வரலாற்று கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களிலும், மறைந்த தலைவர்களின் வாழ்க்கையை கூறும் சுயசரிதை திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்துவருகிறார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை அவர் குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ‘பாரத் பாக்கிய விதாதா’ என்ற புதிய திரைப்படத்தில் கங்கனா ரணாவத் நடித்துவருகிறார். இந்த திரைப்படம் 2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலின் பின்னணியில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக அந்த தாக்குதலின்போது மும்பையில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் நடைபெற்ற சம்பவங்கள் இந்த திரைப்படத்தில் பிரதிபலிக்கப்படுகின்றன. அந்த இக்கட்டான சூழ்நிலையில் அங்கு பணியாற்றிய செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் எவ்வாறு தைரியமாக செயல்பட்டு அந்த சூழ்நிலையை சமாளித்தனர் என்பதை இந்த படம் எடுத்துரைக்கிறது. இதில் செவிலியர் கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் மனோஜ் கபாடியா இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading