‘தெய்வத்திருமகள்’, ‘சைவம்’, ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘துரந்தர்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் சாரா அர்ஜுன். தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், பின்னர் ஹிந்தி திரைப்படமான ‘துரந்தர்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்துள்ளார். இதையடுத்து ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், தன்னுக்கு மேக்கப் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை என்று சாரா அர்ஜுன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, தன்னை எப்போதும் இயற்கையான தோற்றத்திலேயே வெளிப்படுத்த விரும்புவதாகவும், சினிமா விழாக்களுக்கு சென்றாலும் கூட மிக லேசான மேக்கப் மட்டுமே பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
திரைப்படங்களில் நடிக்கும் போது மட்டும் அந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான அளவு மேக்கப் பயன்படுத்துவேன். அதற்குப் பிறகு சாதாரண நேரங்களில் மேக்கப் பயன்படுத்தும் பழக்கம் இல்லை. அதில் எனக்கு பெரிதாக ஆர்வமும் இல்லை என்று சாரா அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
