ரவிதேஜா – பிரியா பவானி சங்கர் நடிக்கும் படத்தில் இணைந்த நடிகை தமன்னா!

ஹிந்தி மொழியில் உருவான ‘ஓ ரோமியோ’ திரைப்படத்தில் நடித்ததைத் தொடர்ந்து தற்போது நடிகை தமன்னா தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘புருஷன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனுடன் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் தொடர்ந்து பல புதிய படங்களில் பங்கேற்று பிஸியாக செயல்பட்டு வருகிறார். மேலும் தெலுங்கு மொழியில் உருவாகும் ‘தட் இஸ் மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தில் கதையின் மைய நாயகியாகவும் தமன்னா நடித்து வருகிறார். பிரசாந்த் வர்மா இயக்கும் இந்த படம், ஹிந்தியில் 2014ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘குயின்’ திரைப்படத்தை தழுவி உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் தற்போது தெலுங்கில் நடிகர் ரவிதேஜா நடித்து வரும் ‘இருமுடி’ திரைப்படத்திலும் தமன்னா இணைந்துள்ளார். இந்த படத்தில் ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துக் கொண்டிருக்கிறார். படக்குழு இந்த கதையில் பல்வேறு திருப்பங்களைக் கொண்ட கதாபாத்திரங்களை அமைத்து வருவதாக கூறப்படுகிறது.

ஐயப்ப சுவாமியின் பக்தராக கருப்பு உடை அணிந்து எளிய மனிதனாக தோன்றும் கதாபாத்திரத்தில் ரவிதேஜா நடிக்கும் இந்த திரைப்படத்தில், கதையின் ஒரு முக்கிய கீ ரோலில் தமன்னா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரவிதேஜா மற்றும் பிரியா பவானி சங்கர் தொடர்பான பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் தமன்னா இடம்பெறும் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading