கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக குஷி ரவி விளங்குகிறார். ‘தியா’, ‘ஸ்பூக்கி காலேஜ்’, ‘கேஸ்ஆப் கொண்டனா’, ‘புல் மீல்ஸ்’ உள்ளிட்ட பல கன்னட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், ‘பிண்டம்’ என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது அவர் ‘மனிதனும் தெய்வமாகலாம்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை விஜயா சதிஷ் மற்றும் ஆர்.எஸ். சதிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
மேலும் இந்தப் படத்தில் செல்வராகவன், ஆர்.எஸ். சதிஷ், கௌசல்யா, மைம் கோபி, ஒய்.ஜி. மகேந்திரன், லிர்த்திகா, சேலம் தீபக், சுதா, ஜோதிகண்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.கே. பிரியன் இசையமைத்துள்ளார். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், பிந்தைய தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
