என்னுடன் சில நடிகைகள் நடிக்க மறுத்தார்கள்… ஆனால் இன்று அவர்களே யூத் படத்தை ப்ரோமோட் செய்கிறார்கள் – கென் கருணாஸ்!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தில் நடிகர் தனுஷின் மகனாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கருணாஸின் மகன் கென். அந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்ற அவர், பின்னர் நடிகர் தனுஷிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது ‘யூத்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் கென் அறிமுகமாக உள்ளார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ‘சிறை’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற அனிஷா அனில்குமார் நடித்துள்ளார். மேலும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு நடைபெறும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கென் கலந்து கொண்டு வருகிறார்.

அப்போது அவர் பேசியபோது, “இந்த திரைப்படத்தின் கதையை பல நடிகைகளிடம் நான் கூறியிருந்தேன். பலர் கதை மிகவும் பிடித்திருக்கிறது என்று சொன்னாலும், அதில் நடிக்க மறுத்துவிட்டார்கள். சிலர் வேறு ஒரு கதாபாத்திரம் கொடுக்குமாறு கேட்டனர். இன்னும் சிலர் வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய செய்திகளுக்கு கூட பதில் அளிக்கவில்லை. ஆனால் தற்போது இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘முட்டக்கலக்கி’ பாடல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. என்னுடன் நடிக்க மறுத்த அந்த நடிகைகளில் சிலர் கூட அந்த பாடலுக்கு தங்களது சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு, என் படத்திற்கு மறைமுகமாக புரமோஷன் செய்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading