ஹாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது ‘பேட்டில் ஆப் கல்வான்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். அபூர்வ லக்கியா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக அவர் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி இரட்டை இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் சல்மான் கான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் குறித்து கடந்த மூன்று மாதங்களாக இயக்குநர்கள் மற்றும் நடிகருக்கு இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக அவர்கள் கூறிய கதைக்களம் சல்மான் கானுக்கு மிகவும் பிடித்ததாக சொல்லப்படுகிறது. அந்தக் கதையின் மையமாக, சினிமாவில் சூப்பர் ஹீரோவாக திகழும் ஒருவர் அந்த வாழ்க்கையால் சோர்ந்து, அதிலிருந்து விலகி அமைதியாக ஓய்வு பெற விரும்புகிறார். ஆனால் காலத்தின் சூழ்நிலைகள் மீண்டும் அவரை அதே வீரக் கதாபாத்திரத்திற்குள் இழுத்து செல்லும் வகையில் கதை நகர்கிறது. நகைச்சுவையும் அதிரடி அம்சங்களும் இணைந்த இந்த கதையை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
