‘பட்டனை அழுத்தினால் பணம் கொட்டும்’ கவனத்தை ஈர்க்கும் ‘கான் சிட்டி’ டீஸர்!

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘கான் சிட்டி’ (Con City). இந்த படத்தில் நடிகர் அர்ஜூன் தாஸ், நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகி பாபு, மூத்த நடிகை வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புதுமையான கதைக்களத்துடன் குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய ஃபேமிலி எண்டர்டெய்னராக உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது ‘கான் சிட்டி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. அந்த டீசரில், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் கடன் சிக்கலில் தவித்து கொண்டிருக்கும் சூழலில், பட்டனை அழுத்தினால் பணம் கொட்டும் மர்ம இயந்திரம் ஒன்று அவனிடம் கிடைக்கிறது. அந்த இயந்திரம் கணவன், மனைவி மற்றும் குடும்பத்தினரின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களுமே கதையின் மையமாக அமைகிறது என்பதைக் டீசர் சுட்டிக்காட்டுகிறது. இந்த டீசர் வெளியாகியதன் மூலம் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading