சிக்ஸ் பேக் விபரீதமானது, யாரும் முயற்சி செய்ய வேண்டாம்… நடிகர் பரத் வேண்டுகோள்!

முன்னணி நடிகரான பரத், ‘555’ திரைப்படத்திற்காக கடுமையான உடற்பயிற்சியின் மூலம் சிக்ஸ் பேக் உடற்கட்டிற்கு மாறினார். அந்த படத்திற்காக அவர் மேற்கொண்ட முயற்சி அப்போது பெரிதும் பேசப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், சிக்ஸ் பேக் உடற்கட்டைப் பெறும் முயற்சியை யாரும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சிக்ஸ் பேக் என்பது மிகவும் கடினமானதும் உடலுக்கு சிரமமான முயற்சியாகும் என்று தெரிவித்தார். இதை பலமுறை தான் வலியுறுத்தி கூறியுள்ளேன் என்றும், தயவுசெய்து யாரும் இந்த முயற்சியை செய்ய வேண்டாம் என்றும் அவர் கூறினார். சிக்ஸ் பேக் உருவாக்கும் முயற்சியில் உடல் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

சிக்ஸ் பேக் உடற்கட்டைக் பெறுவதற்கு பல தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கும் என்றும், அதற்காக வாழ்க்கை முறையே முழுவதும் மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார். வெளியில் இருந்து பார்க்கும்போது இது எளிதாகத் தோன்றினாலும், அதை நடைமுறையில் செய்ய மிகவும் கடினமான முயற்சி தேவைப்படும் என்றும் தெரிவித்தார்.ஒருவர் கண்டிப்பாக சிக்ஸ் பேக் பெற வேண்டும் என்று முடிவு செய்தால், ஒருமுறை முயற்சி செய்து அதை செய்து காட்டி விட்டு பின்னர் அதை விட்டுவிட வேண்டும் என்றும் அவர் கூறினார். அதை தொடர்ந்து பராமரிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும், அது உடல்நலத்திற்கு நல்லதல்ல என்றும் அவர் எச்சரித்தார்.

‘555’ திரைப்படத்திற்காக சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடுமையான உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்ததாகவும் அவர் கூறினார். அந்த காலத்தில் பெரும்பாலும் கோழிக்கறி, முட்டை, உலர் திராட்சை மற்றும் பிஸ்கெட் போன்றவற்றை மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார். எனவே சிக்ஸ் பேக் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று ரசிகர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading