நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகியாக நடிக்கும் ‘ரைசா வில்சன்’

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடையே பெரும் புகழைப் பெற்றவர் நடிகை ரைசா வில்சன். அதன் பின்னர் பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்ஐஆர், பொய்கால்குதிரை, காபி வித் காதல், கருங்காப்பியம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவற்றிற்கு பின்னர் சரியான திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ரைசா வில்சன் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நோவா என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அவருக்கு ஒரு முக்கியமான கம்பேக் படமாக பார்க்கப்படுகிறது.

ஆதி மற்றும் ஹன்சிகா மோத்வானி நடித்த பார்ட்னர் திரைப்படத்தைத் தொடர்ந்து ராயல் பார்ச்சுனா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் நோவா. இருபதுக்கும் மேற்பட்ட விளம்பர திரைப்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட மைலோ இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஆண்மை தவறேல் துருவா, கன்னட நடிகை அத்விதி ஷெட்டி, பெங்காலி நடிகை கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், யூடியூப் புகழ் பைனலி ஸ்வாதிகா மற்றும் பைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவராஜ் சந்திரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை கிறிஸ்டோ பாப் மேற்கொண்டுள்ளார்.

இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் மைலோ கூறும்போது, “இந்த படம் ஹாரர், சயின்ஸ் பிக்ஷன், சூப்பர் நேச்சுரல், ஃபேண்டஸி, திரில்லர் ஆகிய பல அம்சங்களை கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது. ஒரே ஒரு வகை கதையாக இதை கூற முடியாது. இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் ரைசா வில்சன் கம்பேக் கொடுக்கிறார். அதேபோல் கன்னடம், மலையாளம், பெங்காலி போன்ற பல மொழிகளை சேர்ந்த நடிகர்களையும் இந்த படத்தில் இணைத்துள்ளோம். பிரபல மலையாள வில்லன் நடிகரான சைன் டாம் சாக்கோவின் தம்பி ஜோ ஜான் சாக்கோ இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நடைபெற்றுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading