அதிர வைக்கும் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘லீடர்’படத்தின் டீஸர்!

2022-ஆம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் திரைப்படத்திற்குப் பிறகு, தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன் தற்போது லீடர் என்ற புதிய திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து வருகிறார். எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த கூட்டணி தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நடித்து வருகிறார். மேலும் நடிகர்கள் ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், லால், பாகுபலி திரைப்படத்தில் நடித்த பிரபாகர், அமிர்தா அய்யர், வி.டி.வி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஒளிப்பதிவை எஸ். வெங்கடேஷ் மேற்கொண்டு வருகிறார்.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் லெஜண்ட் சரவணன் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்த படம் வருகிற ஏப்ரல் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசர் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading