நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துக் கொண்டார். கடந்த பதினைந்து ஆண்டுகளில் அவர் மிகக் குறைந்த அளவிலான திரைப்படங்களிலேயே நடித்துள்ளார். இந்த காலகட்டத்தில் மொத்தமாக ஐந்து திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கடைசியாக தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நந்தினி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராய். அந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றது. குறிப்பாக அந்த கதாபாத்திரத்தின் அழகு, மர்மம் மற்றும் வலிமையான குணாதிசயங்களை அவர் சிறப்பாக வெளிப்படுத்தியதாக பாராட்டுகள் கிடைத்தன.
அதன்பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த அவர் தற்போது மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளார். இதுகுறித்த சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஆனால் இது புதிய திரைப்படம் அல்ல என்றும், ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள விளம்பரப் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ன்றும் கூறப்படுகிறது.
