வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “விஸ்வநாத் அன்ட் சன்ஸ்”… வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நடிகர் தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படமும், துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய வெங்கி அட்லுரி தற்போது நடிகர் சூர்யாவின் 46வது திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த புதிய திரைப்படத்தை தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு இணைந்துள்ளார்.

மேலும், இந்த திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன் மற்றும் பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின்‌ மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு “விஸ்வநாத் அன்ட் சன்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படம் வருகின்ற ஜூலை மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading