தனுஷ் நடித்துள்ள ‘கர’ படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு!

நடிகர் தனுஷ் நடித்து வரும் 54வது திரைப்படத்தை, ‘போர் தொழில்’ திரைப்பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். இந்த புதிய திரைப்படத்தில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் மேற்கொண்டுள்ளார். 

இந்த திரைப்படத்திற்கு ‘கர’ என பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் டீஸரில் நடிகர் தனுஷ் பேசிய வசனங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. அவரின் குரலும், அதிரடி தோற்றமும் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்தது.

 இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது வெளியீட்டிற்கான பின்னணி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படம் ஏப்ரல் 30ல் ரிலீஸாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ‘கர’ திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading