இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படம் கடந்த 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். குடும்பம் மற்றும் சமூகத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்துடன் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது. மேலும், இணைய தள ஒளிபரப்பு உரிமையை ஜீயோ ஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ளது. இந்த திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ‘தாய் கிழவி’ திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே ரூ.22 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பு செலவு சுமார் பத்து கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படும் நிலையில், குறுகிய காலத்தில் 22 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
