விரைவில் திரைக்கு வரும் மாதவன் நடிப்பில் ‘திருச்சிற்றம்பலம்’ பட இயக்குனர் இயக்கியுள்ள ‘அதிர்ஷ்டசாலி’ !

‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர், நடிகர் மாதவனை கதாநாயகனாக கொண்டு ‘அதிர்ஷ்டசாலி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சாய் தன்ஷிகா, மடோனா செபாஸ்டியன் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்து வருகிறது. படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்திருந்தாலும், சில நிர்வாக மற்றும் தயாரிப்பு தொடர்பான காரணங்களால் படம் இதுவரை வெளியாகாமல் நிலுவையில் உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் வெளியீடு குறித்து ஆவல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தை முதலில் தயாரித்த ஏ.ஏ நிறுவனம் இருந்து, முழுமையான உரிமையையும் ஐயங்கரன் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட தேவையான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading