இயக்குனர் விக்னேஷ் சிவன் வரிகளில் வெளியான ‘டாக்சிக்’ படத்தின் ‘தபாஹி’ பாடல்!

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், ‘ராகிங் ஸ்டார்’ யஷ் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘டாக்சிக்’. 1940 முதல் 1970 வரை கோவா பகுதியில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களின் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகும் ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சூழல், குற்ற உலகம் மற்றும் அதிரடி அம்சங்கள் இணைந்த கதை அமைப்புடன் படம் தயாராகி வருகிறது.

இந்த திரைப்படத்தில் நடிகைகள் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல்வேறு மொழி ரசிகர்களையும் சென்றடையும் வகையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் மார்ச் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘டாக்சிக்’ திரைப்படத்தின் ‘தபாஹி’ என்ற பாடல் மார்ச் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. யஷ் மற்றும் கியாரா அத்வானி இடையேயான காதல் காட்சிகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலின் முன்னோட்டக் காட்சி சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியிடப்படுவதால், ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி வரிகளில் பாடல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் பதிப்பில் இடம்பெறும் பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading